அண்ணாமலையை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை?- உதயநிதி ஸ்டாலின்
வருமான வரித்துறை சோதனை மூலம் திமுகவை எப்போதும் அச்சுறுத்த முடியாது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் விருதுகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மை செயலாளர் அதுல்யா மிஷ்ரா, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், அண்ணா பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதன்பின் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “வருமான வரித்துறை சோதனை மூலம் திமுகவை எப்போதும் அச்சுறுத்த முடியாது. திமுக எப்போதும் குற்றச்சாட்டுகளை தகர்த்தெறிந்து பணியாற்றிவருகிறது. அண்ணாமலை குறித்து பா.ஜ.க குறித்தும் வெளியான ஆடியோவிற்கு என்ன விளக்கம் அளித்தார்கள். ஒரு வாரத்தில் செய்தியாளர்களை சந்திப்பேன் எனக் கூறிய அண்ணாமலை ஏன் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கவில்லை. நேற்று கர்நாடகாவில் தமிழ் தாய் வாழ்த்து அவமரியாதை செய்தது குறித்து, அண்ணாமலையை ஏன் பத்திரிகையாளர்கள் யாரும் கேள்வி கேட்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார்.