spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு நூற்றாண்டை கண்ட போராட்ட வீரர் கவலைக்கிடம்… மருத்துவமனைக்கு விரையும் அரசியல் தலைவர்கள் …

 நூற்றாண்டை கண்ட போராட்ட வீரர் கவலைக்கிடம்… மருத்துவமனைக்கு விரையும் அரசியல் தலைவர்கள் …

-

- Advertisement -

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் ஆர். நல்லகண்ணு (101 வயது) உடல்நிலை தற்போது மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நூற்றாண்டை கண்ட போராட்ட வீரர் கவலைக்கிடம்… மருத்துவமனைக்கு விரையும் அரசியல் தலைவர்கள் …

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். சுமார் 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று அவரது உடல்நிலையில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கின்றன.

we-r-hiring

அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில்  செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிக கவலைக்கிடமாக  இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் மருத்துவமனைக்குச் சென்று நல்லகண்ணு  உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்,  வீரபாண்டியன் பல அரசியல் தலைவர்கள் நல்ல கண்ணு உடல்நிலை குறித்து விசாரித்து சென்றனர்.

இந்த நிலையில் தற்போது விசிக தலைவர் திருமாவளவன் நல்லகண்ணுவில் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் விசாரித்தார் மேலும், அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்தும் மருத்துவரிடம் திருமாவளவன் விசாரித்தார்.

நல்லகண்ணு உடல்நிலை குறித்து விசாரித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தீவிர சிகிச்சை பிரிவில் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சுத் திணறல் கானமாக அவர் அனுமதிக்கப்பட்டார் தற்போது சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். வயது மூப்பால் ஏற்பட்டுருக்கிற ஒரு பின்னடைவு அதை காப்பாற்றுவதற்கு அரசு மருத்துவர்கள் ,மருத்துவ பணியாளர்கள் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள்…

அவர் நலம் பெற வேண்டுகிறோம். மிகவும் திடகாத்திரமான  உடலுக்குரியவர் ஆனால் தற்போது அவரது உடல் மிகவும்  நலிவுற்றுகிற காட்சியை பார்க்கும்போது மனம் மிகவும் மனம் கவலைக்குரியதாக இருக்கிறது. 100 ஆண்டு வாழ்வது என்பது ஒரு சாதனைதான் அண்மையில் தான் நூற்றாண்டு கண்டார் அவர் நலம் பெற வேண்டுமென்று வினைகிறோம்…

மருத்துவ தரப்பில் அவர் உடல்நிலை மிகவும் பின்னடைவு தான் ஏற்பட்டு வருகிறது நாங்கள் போராடி வருகிறோம் என்று தெரிவிக்கிறார்கள். நேரடியாக இறப்பையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது அதேபோல் ரெக்யூஸ்ட் மீ செய்யப்பட்டு தொண்டையில் அறுவை செய்து நேரடியாக மூச்சு குழலில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்றிலிருந்து சிறுநீரகத்தில் உப்பு அதிகரித்திருப்பதால் அந்த தொல்லையும் கூடுதலாக அவருக்கு சிறுபங்குகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தங்களால் இயன்றவரை நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

10 ரூபாய் டாக்டர் காலமானார்!! ஊரே திரண்டு வந்து அஞ்சலி!!

MUST READ