நடிகை ஜோதிகா தலைகீழாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் நடிகையாகவும் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்ந்து வந்தார் ஜோதிகா. ஜோதிகாவின் துருதுரு நடிப்பிற்கு உருண்டை கண்களுக்கும் ரசிகர்கள் கோடி.


சினிமாவின் உச்சத்தில் இருந்த ஜோதிகா நடிகர் சூர்யா மீது காதல் கொண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். தற்போதும் தமிழ் சினிமாவில் மிகவும் பிடித்த ஜோடி என்றால் சூர்யா ஜோதிகாவே அநேகம் பேர் கை காண்பிப்பர்.
திருமணத்தை அடுத்து படங்களில் தலைகாட்டாமல் இருந்து வந்த ஜோதிகா தற்போது பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் உடலை பிட் ஆக வைத்துக் கொள்ள ஜோதிகா அடிக்கடி உடற்பயிற்சி செய்வதுண்டு. தற்போது கால்கள் தரையிலே படாமல் தலைகீழாக நின்று பல உடற்பயிற்சிகளை செய்து வருகிறார் ஜோதிகா. அந்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.


