Homeசெய்திகள்அரசியல்திருச்சி பொதுக்கூட்டம் – எடப்பாடி பழனிச்சாமி படம் புறக்கணிப்பு… அதிமுகவினர் அதிர்ச்சி…

திருச்சி பொதுக்கூட்டம் – எடப்பாடி பழனிச்சாமி படம் புறக்கணிப்பு… அதிமுகவினர் அதிர்ச்சி…

-

- Advertisement -

திருச்சி NDA பொதுக்கூட்டத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் இடம்பெறாதது அதிமுகவினரிடம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பொதுக்கூட்டம் – எடப்பாடி பழனிச்சாமி படம் புறக்கணிப்பு… அதிமுகவினர் அதிர்ச்சி…

we-r-hiring

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

பொதுக்கூட்டம் நடைபெறும்  மைதானத்தின் நுழைவு ழைவுவாயிலில் NDA கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களின் புகைப்படங்களுடன் பேனர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பேனரில் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் இடம்பெறாதது கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டின் NDA  கூட்டணியின் முக்கிய தலைவராக எடப்பாடி பழனிச்சாமி கருதப்படும்  நிலையில், அவருடைய படம் இல்லாதது அதிமுகவினரிடம் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அந்த பேனரில், NDA கூட்டணியின் மற்ற தலைவர்களான நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் உள்ளிட்டோரின் அனைவரது புகைப்படமும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக – என்.டி.ஏ. அணி ஒட்டவைக்கப்பட்ட கூட்டணி! சசிகலா, ஓபிஎஸ் நிலை என்ன? ஆளுர் ஷாநவாஸ் நேர்காணல்!

MUST READ