Homeசெய்திகள்சென்னைசென்னை: பழைய கோவில்களில் ஜாக்கிகள் மூலம் நவீன தொழில்நுட்ப பணி ஆரம்பம்!!

சென்னை: பழைய கோவில்களில் ஜாக்கிகள் மூலம் நவீன தொழில்நுட்ப பணி ஆரம்பம்!!

-

- Advertisement -

சென்னையில் பழைய புரதான கோவில்கள் இடித்துவிட்டு புதியதாக கட்டுவதற்கு  பதில் ஜாக்கிகளை வைத்து கோவில்களை உயர்த்தும் நவீன தொழில்நுட்பத்தின் பணி அதிக அளவில் நடைபெறுகின்றன.சென்னை: பழைய கோவில்களில் ஜாக்கிகள் மூலம் நவீன தொழில்நுட்ப பணி  ஆரம்பம்!!திருவொற்றியூர் காலடிப்பேட்டையில்  பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்  சாலைகளின் உயரத்தால் கோவிலின் உயரம் குறைந்து பள்ளத்தில் சென்றது. இதனை அடுத்து கோவிலை பூமியிலிருந்து ஆறடி உயர்த்துவதற்காக அப்பகுதி மக்கள் கோவில் நிர்வாகிகள் திட்டமிட்டனர்.

கோவிலை இடித்து விட்டு புதியதாக கட்டாமல் இருக்கும் கோவிலேயே உயர்த்துவதற்கு முடிவெடுத்து ஜாக்கிகள் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜாக்கிகள் மூலம் கோவிலின் இடிக்காமல் ஆறடி உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

we-r-hiring

150 ஜாக்கிகள்  கொண்டு 15 வேலையாட்களுடன்  ஒரு மாதத்திற்குள் பணிகள் நிறைவு பெறுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

பொதுவாக கோவிலை இடித்து விட்டு புதியதாக கட்டுவதற்கு  செலவு 60 லட்சத்திற்கு மேல் ஆகும் நிலையில் மேலும் இரண்டு வருட காலம் பணிகள் நடைபெறும் சூழ்நிலையில் 15 லட்ச ரூபாய் செலவில் ஒரு மாதத்தில் கோவில் பழமை பாராமல் உயர்த்தப்படுவது பொதுமக்களிடையே வரவேற்பை  பெற்றுள்ளது

தற்பொழுது அனைத்து கோவில்களிலுமே இந்த நடைமுறைகள் பின்பற்றி  வருவதனால் பொருளாதார சேமிப்பு புராதான சிலைகள் பாதுகாப்பு என பழமை மாறாமல்  கோவில் புனரமைக்கப்படுவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நயாரா பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

MUST READ