Homeசெய்திகள்சென்னைஆய்வாளர் விமலா பணியிடை நீக்க தடைக்கு எதிர்ப்பு - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

ஆய்வாளர் விமலா பணியிடை நீக்க தடைக்கு எதிர்ப்பு – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

-

- Advertisement -

லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவின் பணியிடை நீக்க உத்தரவுக்குத் தனி நீதிபதி விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.ஆய்வாளர் விமலா பணியிடை நீக்க தடைக்கு எதிர்ப்பு - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

​இந்த விவகாரத்தின் பின்னணி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை குறித்த விவரங்கள் வருமாறு, ​சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரிந்த ராஜலட்சுமி என்பவருக்கு எதிராக எழுந்த புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலா விசாரித்து அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ராஜலட்சுமிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (FIR) தயார் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை விமலாவுக்கு உத்தரவிட்டது. ​துறை இயக்குநரின் ஒப்புதல் மற்றும் சில திருத்தங்களுக்குப் பின், அந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. ஆனால், உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்த நிலையிலும், கடந்த ஜூன் 17ஆம் தேதி ஆய்வாளர் விமலா திடீரென பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டார்.

we-r-hiring

​தனி நீதிபதியின் அதிருப்தியும் தடையும்
​இந்த அநீதியான பணியிடை நீக்க உத்தரவை எதிர்த்து ஆய்வாளர் விமலா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, “காவல் ஆய்வாளர் விமலாவுக்கு எதிரான பணியிடை நீக்க உத்தரவு முற்றிலும் உள்நோக்கம் கொண்டது” எனத் தனது கடுமையான அதிருப்தியைத் தெரிவித்தார். ​மேலும், அந்த சஸ்பெண்ட் உத்தரவுக்கு ஜூலை 9ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டதோடு, இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் பதிலளிக்கவும் ஆணையிட்டார்.

​தமிழக அரசின் அவசர மேல்முறையீடு
​தனி நீதிபதியின் இந்த உத்தரவால் பின்னடைவைச் சந்தித்த தமிழக அரசு, உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ​இந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக உடனே விசாரணைக்கு எடுக்கக் கோரி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கவுதம் முறையீடு செய்தார். இந்த முறையீட்டைப் பரிசீலித்த நீதிபதிகள், “வழக்கு முறைப்படி எண்ணிடப்பட்ட (Numbered) பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளனர். ​உயரதிகாரிகளின் உத்தரவை அமல்படுத்திய பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், அதற்கு நீதிமன்றம் தடை விதித்ததும், தற்போது அரசு அதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருப்பதும் காவல்துறை மற்றும் நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்குப் போட்டவருக்கு சஸ்பெண்ட்; மாமூல் வாங்கியவர் பணியில்! – DVAC-இல் நடக்கும் உள்சூழ்ச்சியை அம்பலப்படுத்திய சவுக்கு ஷங்கர்!

MUST READ