Homeசெய்திகள்சென்னைஆவின் பால் விநியோகக் குறைப்பைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி...

ஆவின் பால் விநியோகக் குறைப்பைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

-

- Advertisement -

சென்னை பெருநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டுச் சரிசெய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.ஆவின் பால் விநியோகக் குறைப்பைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

​இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு, ”​சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஆவின் நிறுவனம் மூலம் தினசரி 14.50 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், பொதுமக்களின் உண்மையான தினசரித் தேவை 15.50 லட்சம் லிட்டராக உள்ளது. சந்தையில் பல தனியார் நிறுவனங்கள் பால் விற்பனையில் ஈடுபட்டிருந்தாலும், பொதுமக்கள் ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் தயிர் உள்ளிட்ட பொருட்களையே பெரிதும் விரும்பி வாங்கி வருகின்றனர். குறிப்பாக, ஆவின் “கிரீன் மேஜிக்“ பால் ஒரு லிட்டர் ₹44-க்கும், அரை லிட்டர் ₹22-க்கும் விற்பனை செய்யப்படுவதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இதனை அதிகம் நாடுகின்றனர்.

we-r-hiring

​30 விழுக்காடு வரை குறைப்பு: தனியார் வசம் செல்லும் சந்தை?
​இப்படியொரு சூழலில், ஆவின் நிறுவனம் பொதுமக்களுக்கு விநியோகித்து வரும் அனைத்து வகையான பாலின் அளவில் ஒட்டுமொத்தமாகச் சுமார் 7 விழுக்காடு வரை திடீரெனக் குறைத்துள்ளது. அதிலும் குறிப்பாக, மக்கள் அதிகம் வாங்கும் “கிரீன் மேஜிக்“ பாலின் அளவு 30 விழுக்காடு வரை வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ​ஆவின் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, நுகர்வுச் சந்தையைத் தாராளமாகத் தனியார் நிறுவனங்களின் வசம் தள்ளிவிடும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதுடன், ஆவின் பால் விநியோகச் சங்கிலியின் முக்கிய அங்கமாக விளங்கும் முகவர்களையும் இழக்கும் நெருக்கடி உருவாகியுள்ளது.

​இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை
​முன்பெல்லாம் பால் கொள்முதல் குறையும் காலங்களில், ஆவின் நிறுவனம் மாற்று ஏற்பாடுகளைச் செய்து தனது சந்தை வாய்ப்பை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தது. ஆனால் தற்போது, ஆவின் நுகர்வோர்கள் தங்களுக்குத் தேவையான பால் கிடைக்காமல் அன்றாடம் அவதிப்பட்டு வருகின்றனர். ​எனவே, நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசும், பால்வளத்துறை அமைச்சரும் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும். சென்னை பெருநகர் மற்றும் புறநகர்ப் பகுதி மக்களின் பால் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய ஆவின் நிறுவனம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

சென்னையில் ‘பாடை தூக்கி, ஒப்பாரி வைத்து’ விவசாயிகள் நூதன உண்ணாவிரதப் போராட்டம்!

MUST READ