ஆந்திர கடல்சார் போலீசாரால் காசிமேட்டைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும், 19 மீனவர்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்து சென்னை காசிமேட்டில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் கர்ணன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகள், மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 15-ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. அப்போது அந்தப் படகுகளில் சென்ற 19 மீனவர்களையும், இரண்டு விசைப்படகுகளையும் ஆந்திர கடல்சார் போலீசார் பிடித்து ஜுவ்வாலதிண்ணெ துறைமுகத்துக்கு கொண்டு சென்று பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 19 மீனவர்களும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை துறைமுகத்திலேயே படகுகளில் வைத்து போலீசார் காவலில் வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காசிமேடு விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து, காசிமேடு மீன்பிடித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு திரண்ட மீனவர்கள், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
184 ஆண்டுகால வரலாற்றில் புதிய அத்தியாயம்…பச்சையப்பன் கல்லூரியின் மாணவிகளுக்கும் அனுமதி…
