PNG மற்றும் மின்சார அடுப்புகளை LPG-க்கு மாற்றாக மக்கள் பயன்படுத்துமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேற்காசியப் போர் காரணமாக இந்தியாவிற்கு வர வேண்டிய எல்.பி.ஜி சரக்கு கப்பல்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தினால் அதிக அளவில் மக்கள் எரிவாயு உருளைகளை முன்பதிவு செய்வதாலும் செயற்கையான தட்டுப்பாடு நிலவுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் இன்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் வழங்கியுள்ள அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில், எல்.பி.ஜி-க்கு மாற்றாக பி.என்.ஜி மற்றும் மின்சார அடுப்புகளை பயன்படுத்துமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், போலியான தகவல்களை நம்பி பெட்ரோல் டீசல் ஆகியவற்றை அதிக அளவில் வாங்கி சேமித்துக் கொள்வதையும் எல்.பி.ஜி முன்பதிவு செய்வதையும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக எல்.பி.ஜி முன்பதிவு செய்ய வேண்டுமென்றால் டிஜிட்டல் முறைகளை பயன்படுத்துமாறும் நேரடியாக விற்பனை நிலையங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
எல்பிஜி (LPG) சிலிண்டர் முன்பதிவு: புதிய காலக்கெடு விதிகள் அறிவிப்பு!
