தமிழகத்தில் 2026 ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். ‘வெற்றி ஒன்றே இலக்கு’ என்ற முழக்கத்துடன் களம் காணும் திமுக, தனது சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் பலருக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய தொகுதியான பூந்தமல்லியில் (தனி) மீண்டும் ஆ.கிருஷ்ணசாமி B.A., B.L. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் களம் காணும் கிருஷ்ணசாமி
பூந்தமல்லி தொகுதியில் கடந்த 2021 தேர்தலின் போது அமோக வெற்றி பெற்ற ஆ.கிருஷ்ணசாமி, தொகுதி மக்களிடையே நற்பெயரைப் பெற்றுள்ளார். சட்டத்துறையில் (B.A., B.L.) பட்டம் பெற்றவரான இவர், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவர். தொகுதியில் அவர் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றிய விதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தலைமை அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே அதிமுக தனது முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுப் பிரச்சாரத்தில் குதித்துள்ள நிலையில், தற்போது திமுகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது.
பூந்தமல்லி தொகுதியில் ஆ.கிருஷ்ணசாமி மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதால், திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். “தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் கிருஷ்ணசாமி அவர்கள், இந்த முறையும் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என உள்ளூர் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆவடியில் மீண்டும் ச.மு. நாசர்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
