2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வேட்பு மனுக்கள் பெறும் பணி இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 4 ஆம் தேதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளாா் பிரதமர் மோடி.
தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் செயல்முறைகள் வேகமெடுத்து வருகின்றன. இன்று (திங்கட்கிழமை) முதல் மாநிலம் முழுவதும் வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வருகிற 6ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மதியம் 3 மணி வரை மட்டுமே மனுக்கள் பெறப்படும் என தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. முக்கிய கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். குறிப்பாக, சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து வருகிற 4ஆம் தேதி அவர் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அந்நாளில் அவர் ரோடு ஷோவிலும் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நேரடியாக வாக்கு சேகரிக்க உள்ளார்.
மேலும், இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி விரைவில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!
