Homeசெய்திகள்இந்தியாபீகார்: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்…

பீகார்: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்…

-

- Advertisement -

பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா்.பீகார்: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்…பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள மக்ரா கிராமத்தில் அமைந்துள்ள ஷீத்லாஷ்டமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என கூறப்படுகிறது. இந்த விபத்து, நிர்வாகக் குறைபாட்டால் நிகழ்ந்தது என அங்குள்ள பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நாளந்தாவில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 8 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க, மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். உறவுகளை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆறுதல் என பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

பீகார்: கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் பலி

we-r-hiring

 

MUST READ