Homeசெய்திகள்உலகம்”அடிமை நாடாக இருக்க விரும்பலில்லை”- பிரான்ஸ் அதிபரின் அதிரடி பேச்சு…

”அடிமை நாடாக இருக்க விரும்பலில்லை”- பிரான்ஸ் அதிபரின் அதிரடி பேச்சு…

-

- Advertisement -

ஆதிக்க சக்திகளான சீனா, அமெரிக்காவின் அடிமை நாடாக இருக்க விரும்பவில்லை என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளாா்.

”அடிமை நாடாக இருக்க விரும்பவில்லை”- பிரான்ஸ் அதிபரின் அதிரடி பேச்சு…

we-r-hiring

புதிய உலக அரசியல் சூழலில் மாற்றங்களை உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதாக பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். உலகில் அதிகரித்து வரும் அதிகாரப் போட்டிகள் மற்றும் நிலைகுலைந்த சர்வதேச ஒழுங்கை முன்னிட்டு, இந்தியா உள்ளிட்ட நடுத்தர சக்தி நாடுகள் இணைந்து புதிய உலக ஒழுங்கை உருவாக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனா போன்ற ஆதிக்க சக்திகளின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் கீழ் “அடிமை நாடாக” இருப்பதை ஏற்க முடியாது என மேக்ரான் தெரிவித்தார். குறிப்பாக, அமெரிக்காவின் கணிக்க முடியாத வெளிநாட்டு கொள்கையும், சீனாவின் விரிவடையும் ஆதிக்க அரசியலும் உலக சமநிலையை பாதிக்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சூழலில், ஜப்பான், தென்கொரியா, இந்தியா, கனடா போன்ற நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது எனவும் அவர் கூறினார். இந்நாடுகள் இணைந்து செயல்பட்டால், உலக அரசியலில் புதிய சமநிலையை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், தற்போதைய சர்வதேச அமைப்பு நிச்சயமற்ற நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்ட மேக்ரான், உலகளாவிய சீர்குலைவுகளுக்கு எதிராக செயல்பட்டு, பலதுருவ அடிப்படையிலான புதிய உலக ஒழுங்கை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என வலியுறுத்தினார். இந்த புதிய ஒழுங்கு, ஒற்றை ஆதிக்கத்தை விட கூட்டாண்மை மற்றும் சமநிலையை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய கட்சியால் வரலாற்றை மாற்ற முடியுமா? உலகளவில் நடந்த சில உதாரணங்கள்

MUST READ