Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் - திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

-

- Advertisement -

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது ; இளைஞர்கள் திமுக பக்கம் உள்ளனர் என்பதை முதலமைச்சரின் ரயில் பயணம் காட்டுகிறது என ஆயிரம் விளக்கு திமுக உறுப்பினர் எழிலன் பேட்டியளித்துள்ளாா்.தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர்  - திமுக உறுப்பினர் எழிலன் பேட்டிசென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன்,  வள்ளூவர் கோட்டம் அருகே உள்ள கக்கன் காலனி, காமராஜபுரம், வைகுண்டபுரம், வள்ளூவர் குடியிருப்பு பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். முன்னதாக வாக்கு சேகரிக்க வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் மருத்துவம் எழிலனுக்கு சிலம்பம் விளையாடி சாகசங்களில் ஈடுபட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தார்.

பின்னர் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மருத்துவர் எழிலன், “முதலமைச்சருடன் சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் வரை பயணம் செய்தோம்.  மெட்ரோ ரயில் பயணம் செய்த முதலமைச்சரை இளைஞர் பட்டாளம் சூழ்ந்துகொண்டு மாநில சுயாட்சி குறித்தும், முரசொலி பத்திரிக்கை வைத்து PhD படித்து வருகிறேன் என ஒரு இளைஞர் கூறினார், மகளிர் உரிமை தொகை, மக்களை தேடி மருத்துவம் திட்டம் முழுமையாக சென்றுள்ளது என முதலமைச்சரிடம் பல இளைஞர்கள் தெரிவித்தனர்.  தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. இளைஞர்கள் திமுக பக்கம் உள்ளனர் என்பதை முதலமைச்சரின் ரயில் பயணம் காட்டுகிறது. பாஜகவின் சூழ்ச்சியை மதுரை, கோயம்புத்தூர் மக்கள்தான் ஒரு முடிவு செய்ய வேண்டும்” என கூறியுள்ளாா்.

​அரசியல் களம் – விஜய்யால் உதயநிதியின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு…

we-r-hiring

MUST READ