- Advertisement -
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டமிட்டபடி நடைபெறும்; சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்க்கப்படும்’: அகிலேஷ் யாதவிற்கு அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளாா்.
மக்களவையில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் விமர்சனங்களுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதில் சாதிவாரி கணக்கெடுப்பு சேர்க்கப்படும் என்றும் வியாழக்கிழமையன்று தெரிவித்துள்ளாா்.
சாதி அடிப்படையிலான தரவு சேகரிப்பு மற்றும் கொள்கை முடிவுகளில் அதன் பங்கு குறித்து எதிர்க்கட்சிகள் தெளிவுபடுத்தக் கோரி வரும் நிலையில், ஒரு விரிவான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக அமித் ஷா உறுதிபடக் கூறினார்.

