மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீது 15-18 மணிநேரம் விவாதம் நடத்தப்படும் என்றும் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெண்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்கள் குறித்து மக்களவையில் நீண்ட விவாதம் நடைபெறும் என்றும், அதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறும் என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.

மக்களவையில் அவையில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ரிஜிஜு, இந்த மசோதாக்கள் குறித்து ஆரம்பத்தில் 12 மணிநேரம் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். தேவையெனில் விவாத நேரத்தை நீட்டிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்த மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா விவாதம் தேவைக்கேற்ப நீண்ட நேரம் நடைபெறும் என்று தெரிவித்தார். இந்த மூன்று முக்கிய மசோதாக்கள் மீது 15 முதல் 18 மணிநேரம் வரை விவாதம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், அதன் பின் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
சிறப்புக் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, அரசியலமைப்புத் திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் அதனை சார்ந்த சட்ட முன்வடிவுகள் குறித்து நாடாளுமன்றம் ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நீண்ட நேர விவாதத்திற்குப் பின் இந்த மசோதாக்கள் மீது முடிவு எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொகுதி வரையறை மசோதா மக்களவையில் அறிமுகம் – 251 பேர் ஆதரவு, 185 பேர் எதிர்ப்பு
