மடப்புரம் அஜித் மரண வழக்கில் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையை மதுரை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.![]()
தமிழகத்தையே உலுக்கிய மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் அமர்வு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மானாமதுரை முன்னாள் டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் முன்னாள் ஆய்வாளர் ரமேஷ் குமார் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை பின்னர் அறிவிப்பதாக கூறி விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

இதனிடையே, இந்த வழக்கில் முக்கியமாக கருதப்படும் நகை திருட்டு புகாரை அளித்த நிகிதா, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தனது தரப்பை விளக்கியுள்ளார்.
அஜித்குமார் மரணத்தைச் சுற்றியுள்ள சந்தேகங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த வழக்கு மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னாள் போலீஸ் அதிகாரிகள் முன்ஜாமின் கோரியிருப்பதும், நீதிமன்றத்தின் அடுத்த கட்ட முடிவும் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
நிகிதா இரும்பு பெண்மணி! அஜித் கொலை வழக்கு! அடுத்து என்ன? உமாபதி பேட்டி!
