- Advertisement -
அமெரிக்க ராணுவத்தின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களையும் மீறி, ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்று வெற்றிகரமாக நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானின் மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ராணுவ மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அறிக்கையின்படி, ‘சிலி சிட்டி’ (Sili City) என்ற அந்த எண்ணெய் கப்பல் அரபிக்கடல் வழியாகப் பயணம் செய்து ஈரானிய எல்லைக்குள் நுழைந்துள்ளது. அமெரிக்க கடற்படையின் எச்சரிக்கைகளையும் மீறி, ஈரானிய கடற்படையின் செயல்பாட்டு ஆதரவுடன் இந்தக் கப்பல் ஈரானை வந்தடைந்ததாகக் கூறப்படுகிறது.

அந்தக் கப்பல் தற்போது ஈரானின் தெற்கு துறைமுகங்களில் ஒன்றில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
