கடும் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் முன்னேறிய நடிகர் அஜித் குமாருக்கு அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ்தளப் பக்கத்தில், “எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் நடிகா் அஜித்குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவு ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் அஜித்குமார் மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.
மே தின நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – மீண்டும் ஆட்சி தொடரும் என நம்பிக்கை

