வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.


ஒரே நாளில் ரூ.993 உயர்த்தப்பட்ட வணிக சிலிண்டர் விலை குறித்து அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பே விலை உயர்வு ஏற்படும் என கூறப்பட்ட நிலையில், தேர்தல் முடிந்தவுடன் ஒன்றிய அரசு இந்த உயர்வை அறிவித்துள்ளது என அவர் விமர்சித்தார்.
மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தபோதும் அதன் பலன் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், தற்போதைய பன்னாட்டு நெருக்கடியை காரணம் காட்டி விலையை உயர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வு சிறு வணிகர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதிக்கும் என்பதால், உடனடியாக இதைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
