தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று கருத்து இல்லை அதற்கு காரணம் கூட்டணி பலம் முதன்மையானதாக இருக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் முகநூல் உரையில், “விசிக மூலம் திமுக கூட்டணியை பலவீனப்படுத்த முயற்சி செய்தார்கள். தொலைநோக்கு பார்வையோடு திமுக கூட்டணியில் இருக்கிறோம் வேறு எந்த முதன்மையான காரணமும் இல்லை. தமிழகத்தில் திமுக அதன் எதிர்க்கட்சிகள் வாக்குகளை பிரிக்கின்றனர்.
திமுக அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளுக்கு எதிரான கருத்து நீண்ட காலமாக இந்த மண்ணில் இருந்து வருகிறது. எதிர்ப்பு வாக்குகளும் இருந்து வருகின்றன. தமிழக அரசியலில் அவ்வபோது தோன்றும் அரசியல் கட்சிகள் திராவிட கட்சிகளின் எதிர்ப்பு வாக்குகளை பெறுகின்றனர்.

அதிமுக கூட்டணி, விஜய் கட்சி, சீமான் உள்ளிட்டவர்களின் ஒரே பிரதான அரசியல் திமுக எதிர்ப்பு. புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றி கழகம் திமுக மற்றும் அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளை பெருவாரியாக பெற இருக்கிறார்கள். ஆனால் தனித்து நின்று திமுகவை அதிமுகவை வீழ்த்தி ஆட்சி அமைக்கும் அளவிற்கு வலிமை பெறவில்லை. காட்டுமன்னார்கோயிலில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்து, பின்னர் அதனை மறுத்ததற்கான விமர்சனத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
நான் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடாதது மற்றும் கூடுதல் தொகுதிகள் பெறாதது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பத்து தொகுதிக்கு மேல் கிடைத்திருந்தால் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு புதிதாக ஆறு பேருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கப்படும்” என கூறியுள்ளாா்.
