Homeசெய்திகள்தமிழ்நாடுஇரண்டடி வீரவாளால் கேக் வெட்டி ராயபுரம் தவெக MLA பிறந்தநாள் கொண்டாட்டம்…

இரண்டடி வீரவாளால் கேக் வெட்டி ராயபுரம் தவெக MLA பிறந்தநாள் கொண்டாட்டம்…

-

- Advertisement -

இரண்டடி வீரவாளை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ராயபுரம் தவெக MLA சமூக வலைதளங்களில் வைரலாக வீடியோ பரவி வருகிறது.இரண்டடி வீரவாளால் கேக் வெட்டி ராயபுரம் தவெக MLA பிறந்தநாள் கொண்டாட்டம்…வன்முறை கலாச்சாரங்களை ஒழிப்பேன் மக்களுக்கு பாதுகாவலராக இருப்பேன் என வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகத்தினர், தனது பிறந்தநாளில்  பிளாஸ்டிக் மற்றும் மரத்தினால் ஆன கத்தியை ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமுவிடம் அவரது ஆதரவாளர் வழங்கினர். ஆனால் அதை வைத்துவிட்டு வீரவாளை எடுத்து கையை உயர்த்தி காட்டி அதை வைத்து கேக் வெட்டுவதற்கு முயன்றார். அப்பொழுது அருகில் இருந்த லயோலா மணி தடுத்தார். இதில் வெட்டக்கூடாது என அறிவுறுத்தியும் வீரவாளை வைத்து கேக் வெட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது போன்ற செயல்களில் ஈடுபட  பயங்கர ஆயுதங்களில் வைத்து கேக் வெட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவுறுத்தி இருந்தது. பல ரவுடிகள் இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தில் தமிழக வெற்றிக்காக  பயங்கர ஆயுதங்களில் கேக் வெட்டி வழக்கு பதிவு செய்து தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது. இளைஞர்களுக்கு நல் உதாரணமாக திகழ வேண்டிய ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெற்ற இரண்டாவது நாளே இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

ராயபுரம் சட்டமன்ற உறுப்பினரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  இது வாக்களித்த வாக்காளர்களுக்கும் அந்தக் கட்சியினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.பி.சௌத்ரியின் மறைவுக்கு கமலஹாசன் இரங்கல்

MUST READ