பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பங்குச் சந்தை ஆய்வாளர்களின் கணிப்புப்படி, சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் நாணய மதிப்பு சரிவு காரணமாக, பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர் ராஜேஷ் எச்சரித்தள்ளாா். 
சமீபகாலமாக அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வு குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள பொருளாதார வல்லுநர் ராஜேஷ், இது இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு ‘சங்கிலித் தொடர்’ விளைவை (Chain Reaction) ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்க்கப்படும் முக்கிய விளைவுகள்:
எரிபொருள் விலை உயர்வால் ஏற்படப்போகும் அடுத்தடுத்த பாதிப்புகளை அவர் பின்வருமாறு பட்டியலிடுகிறார்.
போக்குவரத்து செலவு அதிகரிப்பு:லாரிகள் மற்றும் வேன்களுக்கான டீசல் செலவு அதிகரிப்பதால், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவு உயரும்.
உணவுப் பொருட்கள் விலை ஏற்றம்:காய்கறிகள், பால் மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் அடுத்த சில வாரங்களில் கணிசமாக உயரக்கூடும்.
உற்பத்தித் துறை பாதிப்பு:தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவு அதிகரிப்பதால், நுகர்வோர் பயன்படுத்தும் மின்னணு சாதனங்கள் முதல் ஆடைகள் வரை அனைத்துப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது.
பணவீக்கம்:ஒட்டுமொத்தப் பணவீக்க விகிதம் அதிகரிப்பதன் மூலம், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் வாங்கும் திறன் (Purchasing Power) பெருமளவில் குறையும்.
“இனிமேல்தான் உண்மையான ஆட்டம்”,
இது குறித்து அவர் கூறுகையில்,”பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது ஒரு தனிப்பட்ட பிரச்சனை அல்ல. இது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார அமைப்பையும் பாதிக்கும் ஒரு காரணி. தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வு ஒரு ஆரம்பம்தான். இதன் உண்மையான மற்றும் மோசமான விளைவுகளை பொதுமக்கள் வரும் மாதங்களில் சந்திக்க நேரிடும்,” என எச்சரித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் தங்களது சேமிப்பை இழக்க நேரிடும் என்றும், சிறு குறு தொழில்கள் (MSMEs) கடுமையான நஷ்டத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசு வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுக்காதவரை, சாதாரண மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் தற்போதைய கணிப்பாக உள்ளது.
ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு நடைபெறும் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
