Homeசெய்திகள்சினிமா”முதல்வர் விஜய்க்கு இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன” - சௌந்தர்யா ரஜினிகாந்த்

”முதல்வர் விஜய்க்கு இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன” – சௌந்தர்யா ரஜினிகாந்த்

-

- Advertisement -

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன என்று ரஜினிகாந்தின் குடும்பத்தின் சார்பாக சௌந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்துகளுடன் தெரிவித்துள்ளார்.”முதல்வர் விஜய்க்கு இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன” - சௌந்தர்யா ரஜினிகாந்த்சௌந்தர்யா ரஜினிகாந்த் நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, தனது குடும்பத்தினர் சார்பில் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் மற்றும் பெண்களுக்கு ஆட்டோக்களை வழங்கினார்.

விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களது குடும்பம் எப்போதும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். தனது தந்தையும் நடிகருமான ரஜினிகாந்த் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

we-r-hiring

மேலும், தாம் மேற்கொள்ளும் நலத்திட்ட உதவிகளை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தொடங்குவது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அவர், இது முதல் முயற்சி மட்டுமே என்றும், தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற உதவித் திட்டங்களை செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

“மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வர வேண்டிய அவசியமில்லை. எந்த துறையில் இருந்தாலும் சமூகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய முடியும். மக்களுக்கு எது தேவையோ அதை செய்ய முயற்சி செய்வோம்,” என அவர் கூறினார்.

தமிழக அரசியல் நிலவரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக முதல்வராக உள்ள விஜய் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் வாக்களித்துள்ளதாகவும், அவரிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், “முதல்வர் விஜய் இதுவரை பல சவால்களை கடந்து வந்துள்ளார். இனியும் அவருக்கு பல சவால்கள் வரவிருக்கின்றன. அவற்றை அவர் எதிர்கொள்ள வேண்டும்,” என சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை ரோகிணி திரையரங்கில் ‘கருப்பு’ படம் பார்த்துவிட்டு புறப்பட்ட நடிகை த்ரிஷா! ரசிகர்கள் உற்சாகம்

MUST READ