Homeசெய்திகள்தமிழ்நாடுமேகதாது அனை விவகாரம் -சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் விஜய் அவரச ஆலோசனை

மேகதாது அனை விவகாரம் -சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் விஜய் அவரச ஆலோசனை

-

- Advertisement -

மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் விஜய். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு பூமி பூஜை நடத்திட கர்நாடக அரசு உத்தேசித்து வருவது குறித்து உரிய சட்ட நடவடிக்கைகளை விரைவாக எடுத்திட அறிவுறுத்தியுள்ளார்.  மேகதாது அனை விவகாரம் -சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் விஜய் அவரச ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமை செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், தமிழக காவல் துறை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி. ஆகியோர் பங்கேற்றனர்.

we-r-hiring

தமிழகத்தில் அண்மையில் அதிகரித்து வரும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும், விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனுடன், காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட திட்டமிட்டுள்ள விவகாரம் குறித்தும் முதலமைச்சர் விஜய், காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேகதாது அணைக்கான பூமி பூஜையை கர்நாடக அரசு நடத்தத் திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து, தமிழகத்தின் நீர்வரத்து உரிமையை பாதுகாக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அண்ணாக இருப்பேன் என்ற வாக்குறுதி என்ன ஆனது? முதல்வருக்கு டிடிவி தினகரன் கேள்வி!

MUST READ