Homeசெய்திகள்அரசியல்”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…

”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…

-

- Advertisement -

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின் உள்கட்டமைப்புத் திட்டங்கள், நிலுவையில் உள்ள நிதிப் பகிர்வு மற்றும் மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து, மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசின் முழு ஒத்துழைப்பை வலியுறுத்தியுள்ளாா். ”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் விஜய் சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியது தேசிய அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ டெல்லி பயணம் இதுவாகும்.

we-r-hiring

பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நீண்டகால கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் விரிவாக எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது நடிகர் விஜய்யை சந்தித்திருந்தார். அதன் பின்னர் சுமார் 12 ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் நேரில் சந்தித்துள்ளனர். இம்முறை தமிழக முதலமைச்சராக விஜய் பிரதமரை சந்தித்திருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது, காவேரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு முன்னெடுத்து வரும் மேகதாது அணை திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளுக்கான மத்திய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் சாலை, ரயில்வே மற்றும் புதிய தொழில்நுட்ப உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய அரசு அமைந்த பிறகு மத்திய-மாநில உறவை சுமுகமாக முன்னெடுக்க இந்த சந்திப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தின் முக்கிய வாழ்வாதார பிரச்சனைகளான காவேரி நீர் விவகாரம் மற்றும் மெட்ரோ திட்ட நிதி குறித்து நேரடியாக பிரதமருடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக அரசில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு துறைக்கு மத்திய அரசின் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ஒத்துழைப்பையும் முதலமைச்சர் விஜய் கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவிற்கு அடுத்தபடியாக செயற்கை நுண்ணறிவு துறைக்கென தனி அமைச்சகத்தை அமைத்துள்ள மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.

பிரதமரைச் சந்தித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு இல்லத்திற்குத் திரும்பிய முதலமைச்சர் விஜய், தனது டெல்லி பயணத்தின் அடுத்த கட்டமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணி கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிலும் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற பிரதமர் – முதலமைச்சர் சந்திப்பு, மரியாதை நிமித்தமான சந்திப்பை தாண்டி தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் உரிமைகள் தொடர்பான முக்கிய அரசியல் ஆலோசனையாக பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் சமரசம்…சபாநாயகரிடம் மனுவை வாபஸ் பெற்ற எஸ்.பி.வேலுமணி…

MUST READ