Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்

தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்

-

- Advertisement -

தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக (டிஜிபி) மூத்த ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய தேர்வாணையம் பரிந்துரைத்த மூன்று மூத்த அதிகாரிகள் கொண்ட பட்டியலில் இருந்து அவரை தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ளது.தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்

நீண்டகால காவல்துறை அனுபவம் கொண்ட மகேஷ்குமார் அகர்வால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிரிவுகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவர் தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்பி) பணியாற்றியதுடன், சென்னை பூக்கடை துணை ஆணையர், போக்குவரத்து துணை ஆணையர் மற்றும் சிபிசிஐடி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.மேலும், மதுரை காவல் ஆணையர், சென்னை தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் மற்றும் ஆயுதப்படை டிஜிபி உள்ளிட்ட முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.

we-r-hiring

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சென்னை மாநகரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான பணிகளை திறம்பட மேற்கொண்ட அதிகாரிகளில் மகேஷ்குமார் அகர்வாலும் ஒருவர் எனக் கூறப்படுகிறது. அதேபோல், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்ட வழக்கின் விசாரணையையும் அவர் கையாண்டுள்ளார். பரபரப்பை ஏற்படுத்திய சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கு மற்றும் பெண் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய குற்ற வழக்குகளின் விசாரணையிலும் அவர் பங்காற்றியுள்ளார்.

நிர்வாகத் திறன், விசாரணை அனுபவம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ள மகேஷ்குமார் அகர்வாலின் நியமனம் தமிழ்நாடு காவல்துறையில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. புதிய டிஜிபியாக பொறுப்பேற்கும் அவர், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல்துறை நிர்வாகத்தை முன்னெடுக்கும் பொறுப்பை ஏற்க உள்ளார்.

தலைமைச் செயலகத்தில் புதிய நடைமுறை – ஜூன் 1 முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயம்

MUST READ