Homeசெய்திகள்சென்னை24 மணி நேரம் கெடு..! அகற்றாவிட்டால் வாகனங்கள் பறிமுதல் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

24 மணி நேரம் கெடு..! அகற்றாவிட்டால் வாகனங்கள் பறிமுதல் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

-

- Advertisement -

சென்னை மாநகரில் சாலையோரங்களில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த மற்றும் பயன்படுத்தப்படாத வாகனங்கள் மீது மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள இத்தகைய வாகனங்களை 24 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.24 மணி நேரம் கெடு..! அகற்றாவிட்டால் வாகனங்கள் பறிமுதல் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

பிரதான சாலைகள் முதல் குடியிருப்பு பகுதிகளின் உட்புற தெருக்கள் வரை, மாதக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்கள் தூசி படிந்து குப்பை மேடுகளாக மாறியுள்ளன. அவற்றைச் சுற்றி குப்பைகள் கொட்டப்படுவதுடன், சில இடங்களில் சமூக விரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

we-r-hiring

மேலும், இத்தகைய வாகனங்களில் தேங்கும் மழைநீரால் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும் அபாயமும் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முக்கிய சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளுக்கும் காரணமாகி வருகின்றன.

இதையடுத்து, போலீசாரின் ஒத்துழைப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வாகனங்களின் மீது ஒட்டப்படும் நோட்டீஸில், “24 மணி நேரத்திற்குள் வாகனங்களை அகற்ற வேண்டும். தவறினால் மாநகராட்சி அவற்றை அகற்றி பறிமுதல் செய்யும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் எக்காரணம் கொண்டும் திருப்பி வழங்கப்பட மாட்டாது” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இதுபோன்ற நடவடிக்கைகளில் வாகன உரிமையாளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. உரிமை கோரப்படாத வாகனங்கள் பின்னர் பொது ஏலத்தில் விடப்படும் என்றும் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சாலைகள் ஆக்கிரமிப்பை குறைத்து, நகரின் சுகாதாரத்தையும் போக்குவரத்து ஒழுங்கையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஆம்னி பேருந்துகள் தொடர்பான அரசின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..

MUST READ