முதலமைச்சர் விஜய்யின் பேச்சை விமர்சித்த முன்னாள் சபாநாயகர் அப்பாவு, “மக்கள் குரல் கேட்கிறதா?” என்று கேள்வி எழுப்பியதுடன், தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது என்றும் விளக்கம் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பதிவில், “ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் ஆற்றிய உரை, அவரது ஆட்சியின் தொடக்க உரையா அல்லது முடிவுரையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “கொளத்தூரில் ஐந்து நிமிடம் பேசினேன் என்ற ஆணவமான பேச்சு தேவையா? சிறுகதை என்ற பெயரில் ‘உங்கள் அப்பா எங்கே?’ என்ற நக்கல் தேவையா? கை அசைவுகள் மூலம் நையாண்டி செய்வது தேவையா? இது ஒரு முதலமைச்சரின் உரையா அல்லது சமூக வலைத்தள ரீல்ஸுக்கான உரையா?” என்று விமர்சித்துள்ளார்.
அதோடு, தேர்தல் வாக்குறுதிகளை நினைவூட்டும் வகையில் பல கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்குவதாக கூறிய வாக்குறுதி என்ன ஆனது? அங்கன்வாடி உதவியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் எங்கே? காவல்துறை காவலர்களின் அடிப்படை ஊதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி எங்கே? ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக் கழகமான தாட்கோ மூலம் பெற்ற கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக கூறியது என்ன ஆனது? மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணமாக ரூ.20 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தது எங்கே? மானிய விலையில் 3,600 லிட்டர் டீசல் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே? பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் மாதம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது? ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற திட்டம் எங்கே? பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“முதலமைச்சரே, இந்த வாக்குறுதிகள் நினைவில் இருக்கிறதா? மக்களின் குரல் உங்களுக்குக் கேட்கிறதா?” என்றும் அப்பாவு தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
IRTC கணக்கு மட்டும் போதாது…தட்கல் டிக்கெட்டுக்கு புதிய நிபந்தனை!
