Homeசெய்திகள்க்ரைம்ரூ.20 கோடி தங்கம் மோசடி: பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

ரூ.20 கோடி தங்கம் மோசடி: பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

-

- Advertisement -

குறைந்த விலையில் தங்கம் தருவதாகக் கூறி ரூ.20 கோடி வரை மோசடி செய்த வழக்கில், ராயபுரம் பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.ரூ.20 கோடி தங்கம் மோசடி: பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!​சென்னை ராயபுரம் பகுதியில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் ஷீலா மேரி. இவரும், இவரது உறவினரான பிரபு மணி என்பவரும் இணைந்து, “சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருகிறோம்” எனப் பலரிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர். ​இதை நம்பி தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல தரப்பினர் இவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்துள்ளனர். ஆனால், சொன்னபடி தங்கமும் தராமல், வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக சுமார் 20 கோடி ரூபாய் வரை இவர்கள் மோசடி செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

​பாதிக்கப்பட்ட நபர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு (EOW) போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் ஷீலா மேரி மற்றும் அவரது உறவினர் பிரபு மணி ஆகியோர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ​போலீசார் தம்மைக் கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில், பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் (Anticipatory Bail) கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
​இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பிலும் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன:

we-r-hiring

​காவல்துறை தரப்பு வாதம்:
​”குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு காவல் ஆய்வாளர் (Inspector) என்பதால், அவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. மேலும், ரூ.20 கோடிக்கும் அதிமாகப் பொதுமக்கள் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே, அவருக்கு எக்காரணம் கொண்டும் முன்ஜாமீன் வழங்கக் கூடாது.”

​நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
​காவல்துறை தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி சி.குமரப்பன், இந்த மோசடி வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டும், விசாரணை பாதிக்கப்படும் என்பதாலும், காவல் ஆய்வாளர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ​முன்ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதால், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஷீலா மேரியை எந்த நேரத்திலும் கைது செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டத்தைக் காக்க வேண்டிய காவல் அதிகாரியே ரூ.20 கோடி மோசடி வழக்கில் சிக்கி முன்ஜாமீன் மறுக்கப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தில் 5 வயது சிறுமி மர்ம மரணம்: கிணற்றில் வீசிக் கொன்ற அண்ணி!

MUST READ