- Advertisement -
ராஜஸ்தான் மாநிலம் பச்பத்திராவில் (Pachpadra) கட்டப்பட்டுள்ள நாட்டின் மிகமுக்கியமான, அதிநவீன ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
ராஜஸ்தானின் பச்பத்ரா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், கார்பன் உமிழ்வைக் குறைக்கும் தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் அதிநவீன “கிரீன்ஃபீல்டு“ (Greenfield) சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் ஆலை இதுவாகும்.

முக்கிய அம்சங்கள்
- பிரமாண்ட முதலீடு: இந்த அதிநவீன ஆலை சுமார் ரூ.79,450 கோடி பெரும் முதலீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
- கூட்டு முயற்சி: பொதுத்துறை நிறுவனமான ஹெச்பிசிஎல் (HPCL) மற்றும் ராஜஸ்தான் மாநில அரசு ஆகியவை இணைந்து இந்த பிரமாண்ட திட்டத்தை செயல்படுத்தியுள்ளன.
- சுத்திகரிப்பு திறன்: இந்த ஆலை ஆண்டுக்கு 9 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இந்த ஆலையின் மூலம் நாட்டின் எரிசக்தித் தேவை பூர்த்தியாவதுடன், ராஜஸ்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோருக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
