வேங்கைவயலில் ஒருநபர் ஆணையம் விசாரணை
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் விசாரணை மேற்கொண்டுவருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவையில் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் உள்ள பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இருப்பினும் தற்போது வரை இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் நேரடி விசாரணையை தொடங்கியது. ஒருநபர் ஆணையத்தின் விசாரணையால் வேங்கைவயல் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.