Homeசெய்திகள்அரசியல்"வாய்க்கு வந்ததை பேசுவதற்குக் பெயர் தலைவர் அல்ல" – தவெக தலைவர் விஜய்க்கு செல்லூர் ராஜு...

“வாய்க்கு வந்ததை பேசுவதற்குக் பெயர் தலைவர் அல்ல” – தவெக தலைவர் விஜய்க்கு செல்லூர் ராஜு ஆவேச சவால்!

-

- Advertisement -

மதுரையில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு கடுமையான விமர்சனங்களையும் ஆவேசக் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். கட்சியை விட்டுப் போகிறவர்களைப் பற்றிக் கவலை இல்லை என்று குறிப்பிட்ட அவர், தொண்டர்கள் என்றும் இயக்கத்துடனேயே இருப்பார்கள் என்றார்.

செல்லூர்

we-r-hiring

“எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல விஜய் ஒன்றும் கவர்ச்சி இல்லை”
​கூட்டத்தில் பேசிய செல்லூர் ராஜு, “அதிமுகவை நம்பாமல் ஓடிப் போகிறவர்கள் எல்லாம் ஓடுகாலிகள். அரசியல் குறித்து எதுவும் தெரியாத விஜய் போன்றவர்கள் இன்று மேலே வந்துள்ளனர். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவது ஒரு தலைவருக்கு அழகல்ல. விஜய் தனது செய்கைகள் மூலம் ஒரு தலைமுறையையே பாழ்படுத்தி வருகிறார். காமராஜர், கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் அமர்ந்த சட்டமன்றத்தை இன்று சந்தைக்கடை போல மாற்றிவிட்டார்கள். சைகை காட்டிப் பேசும் விஜய் அவர்களே, இது என்ன சந்தைக்கடையா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “விஜய் ஒன்றும் பெரிய கவர்ச்சியான தலைவர் கிடையாது. பார்ப்பவர்கள் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற வசீகரம் கொண்டவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், இதயதெய்வம் ஜெயலலிதாவும் மட்டும்தான்” என்றார்.

“நீ என்ன யோக்கியனா? வரி ஏய்ப்பு கணக்கை மறைத்தாயே!”
​தொடர்ந்து விஜய்யின் கடந்த கால விவகாரங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய செல்லூர் ராஜு:
​”விஜய் அவர்களே, நீங்கள் என்ன யோக்கியனா? நீங்கள் நடித்த படங்களில் வாங்கிய முழுத் தொகையையும் கணக்குக் காட்டியுள்ளீர்களா? கணக்கை மறைத்தீர்களே, அது யோக்கியமா? திரைப்படங்களில் வரி ஏய்ப்பு, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு வரி விலக்கு கோரியது என உங்களது பின்னணி என்ன என்பது எங்களுக்குத் தெரியும்.

அடுத்தவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்; பதவி வரும்போது பணிவும் வர வேண்டும். கடந்த 50 ஆண்டு காலத் திராவிட இயக்க ஆட்சிகளில்தான் தமிழகம் இந்த அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது.”

​”அரசியலை விட்டு ஓட வேண்டியது நீங்கள்தான்”
​தமிழக அரசு மற்றும் விஜய்யின் நிர்வாக நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், “கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, கட்சி கடந்தவர்களுக்கு அரசுப் பதவி கொடுத்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால், இதற்கு முன்பு இருந்த பத்து நபர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? இயற்கை பேரிடர், சாலை விபத்து போன்றவற்றில் இறந்து போகக்கூடியவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை கொடுப்பீர்களா?

எதையும் யோசிக்காமல் அரை முட்டாள்தனமாக, அரைவேக்காட்டுத்தனமாகச் செய்துவிட்டு, ‘ஓடு ஓடு’ என்று மற்றவர்களைச் சொல்லும் நீங்கள்தான் அரசியலை விட்டு ஓட வேண்டும். கோட்டையிலேயே முடங்கிக் கிடப்பதால் உங்களுக்குக் கோப்புகளை (Files) பார்க்கத் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்” என்று செல்லூர் ராஜு மிகவும் ஆவேசமாகப் பேசி சவால் விடுத்தார்.

MUST READ