Homeசெய்திகள்மாவட்டம்முறைகேடு செய்தால் தப்ப முடியாது! சொத்து வரி மோசடிக்கு செக்.. மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர்...

முறைகேடு செய்தால் தப்ப முடியாது! சொத்து வரி மோசடிக்கு செக்.. மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் நாகராஜனின் அதிரடி ஆக்ஷன்!

-

- Advertisement -

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் நாகராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முஸ்தபா, கோபிசன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மதுரை மாநகர மக்களின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மேயர் வெளியிட்டார்.முறைகேடு செய்தால் தப்ப முடியாது! சொத்து வரி மோசடிக்கு செக்.. மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் நாகராஜனின் அதிரடி ஆக்ஷன்!

​மாமன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் விவாதங்களின் விவரம் வருமாறு,

we-r-hiring

​மாமன்றக் கூட்டத்தின் முக்கிய அறிவிப்புகள்
​வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு: மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான வார்டு வளர்ச்சி நிதி ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மண்டலக் கூட்டங்கள் நடத்தப்பட்டு இந்த நிதி முறைப்படி பகிர்ந்தளிக்கப்படும்.

​மழைக்கால முன்னெச்சரிக்கை: வரவிருக்கும் மழைக்காலத்தைக் கருத்தில்கொண்டு, மாநகராட்சிப் பகுதிக்குள் உள்ள 8 முக்கிய வடிகால்கள் உடனடியாகத் தூர்வாரப்படும். அத்துடன், முக்கியச் சாலைகளில் உள்ள பள்ளங்களைச் சரிசெய்யும் ‘பேட்ச்’ (Patch work) பணிகளும் விரைந்து முடிக்கப்படும்.

​மீனாட்சியம்மன் கோவில் மாற்றுத்திட்டம்: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி அடிக்கடி கழிவுநீர் தேங்குவதைத் தடுக்க, நிரந்தரத் தீர்வாக புதிய மாற்றுத்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

​2 லட்சம் மரக்கன்றுகள் நடும் இயக்கம்: ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றத்தின் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், வைகை ஆற்றின் இருபுறங்களிலும் மரங்களை நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 2 லட்சம் மரக்கன்றுகளை நடும் மக்கள் இயக்கம் தொடங்கப்படும்.

​வரி ஏழைத்தாழ்வு சீரமைப்பு: மாநகராட்சியுடன் புதிதாக விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 22 வார்டுகளில் வரியில் பெரும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. இதனைச் சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

​அறிவிப்புப் பலகைகள்: பொதுமக்கள் கோரும் சேவைகளுக்குக் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டதற்கான விவரங்கள் அடங்கிய அறிவிப்புப் பலகை, மக்கள் அறியும் வகையில் அனைத்து மாநகராட்சி அலுவலகங்களிலும் வைக்கப்பட வேண்டும்.

​”சொத்துவரி முறைகேடு: ஓரிரு வாரத்தில் குற்றப்பத்திரிகை” – மேயரின் காரசார பதில்,
​கூட்டத்தின் போது, மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு தொடர்பாக ஓரிரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று மேயர் நாகராஜன் தெரிவித்தார். ​அப்போது குறுக்கிட்டுப் பேசிய தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் ஜெயராமன், “சொத்துவரி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளபோது, அதற்கு எதிராகப் பேசிய அமைச்சர் நிர்மல்குமாருக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுவது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், “சொத்துவரி முறைகேடு ரூ.1 கோடியே 70 லட்சம் நடைபெற்றதில், ரூ.80 லட்சம் வருவாய் திரும்ப வந்துள்ளதாக நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆனால், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் இந்த வழக்கில் தி.மு.க. கவுன்சிலர்களைச் சேர்க்க வேண்டும் என காவல்துறையினருக்கு நெருக்கடி கொடுப்பதாகத் தகவல் வருகிறது. தவறு செய்தவர்களைத் தண்டித்தால் மகிழ்ச்சிதான், ஆனால் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எடுத்தால் இதற்காக உச்ச நீதிமன்றம் வரை கூட செல்வோம்” என்று காரசாரமாகப் பேசினார். ​மாநகராட்சியின் பல்வேறு மக்கள் நலத்திட்ட அறிவிப்புகளுடனும், சொத்துவரி விவகாரத்தில் தி.மு.க. கவுன்சிலரின் காரசார விவாதத்துடனும் இந்த மாமன்றக் கூட்டம் நிறைவடைந்தது.

ஈரோட்டில் சுவாரஸ்யம்: கடையில் புகுந்த திருடனை “மாற்றுப் பூட்டு” போட்டு சிறைபிடித்த கடைக்காரர்கள்! – எஸ்பி அலுவலகம் அருகே பரபரப்பு

MUST READ