Homeசெய்திகள்மாவட்டம்பணி நிரந்தரம் செய்யக் கோரி உளுந்தூர்பேட்டையில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

பணி நிரந்தரம் செய்யக் கோரி உளுந்தூர்பேட்டையில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

-

- Advertisement -

மின்வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, உளுந்தூர்பேட்டை மின்வாரிய அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பணி நிரந்தரம் செய்யக் கோரி உளுந்தூர்பேட்டையில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் ஏராளமான தொழிலாளர்கள் ஒப்பந்தப் பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைந்த ஊதியத்தில், ஆபத்தான சூழல்களிலும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகக் கிடப்பில் உள்ளது.

இந்நிலையில், தங்களது நியாயமான கோரிக்கையை மின்வாரிய நிர்வாகமும், தமிழக அரசும் நிறைவேற்ற வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் இன்று உளுந்தூர்பேட்டை மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு திடீரெனத் திரண்டனர். 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பணி நிரந்தர அரசாணையை உடனடியாக வெளியிடக் கோரியும், காலமுறை ஊதியம் வழங்கக் கோரியும் நிர்வாகத்திற்கு எதிராகத் தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அலுவலக வாயிலில் ஊழியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்துத் தகவலறிந்து வந்த மின்வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊழியர்களின் கோரிக்கைகள் முறைப்படி அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஊழியர்கள் தற்காலிகமாகத் தங்களது போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

திருச்சியில் பயங்கரம்: 40 நாட்களில் 3-வது போதை ஊசி மரணம் – வாலிபர் சஞ்சய் உயிரிழப்பு குறித்து போலீஸார் விசாரணை!

we-r-hiring

MUST READ