Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை முதல்… டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. சிம்பிளா உங்க போன்லயே பண்ணலாம்.. முழு கைடு...

நாளை முதல்… டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. சிம்பிளா உங்க போன்லயே பண்ணலாம்.. முழு கைடு இதோ!

-

- Advertisement -

தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சுமார் 16 ஆண்டுகள் கழித்து புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாளை முதல் (ஜூலை 17) அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், இந்தியாவின் முதலாவது முழுமையான ‘டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக’ இது அமையவுள்ளது.நாளை முதல்… டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. சிம்பிளா உங்க போன்லயே பண்ணலாம்.. முழு கைடு இதோ!

சென்னை சிவானந்தா சாலையில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் தலைமை கணக்கெடுப்பு அதிகாரி சுந்தரேஷ் பாபு, இந்த 16-ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மற்றும் அதன் வழிமுறைகள் குறித்த விரிவான தகவல்களை வெளியிட்டார்.

we-r-hiring

இரு கட்டங்களாக நடக்கும் கணக்கெடுப்பு: முழு விபரம்
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ஆனது, விரிவான டிஜிட்டல் கட்டமைப்புகளுடன் ‘மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948’-ன் கீழ் இரண்டு முக்கிய கட்டங்களாக நடத்தப்படவுள்ளது.

முதற்கட்டம் (வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு)
இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டபடி, ஏப்ரல் முதல் செப்டம்பர் 2026-க்கு இடையில் 30 நாட்கள் தொடர்ச்சியான காலக்கட்டத்தில் இது நடத்தப்படும். இக்கட்டத்தின் போது வீடுகளின் நிலைமை, குடும்பத்திற்கு கிடைக்கும் வசதிகள் மற்றும் குடும்பத்தில் உள்ள சொத்துக்கள் பற்றிய தரவுகள் சேகரிக்கப்படும்.

இரண்டாம் கட்டம் (மக்கள் தொகை கணக்கெடுப்பு)
இந்தியா முழுவதும் பிப்ரவரி 2027-ல் நடத்தப்படும். பனிப்பொழிவு உள்ள பகுதிகளான லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் ஒத்திசைவற்ற காலங்களில் இது நடைபெறும். இக்கட்டத்தில் மக்கள் தொகை சார் பண்புகள், கல்வியறிவு, தொழிலாளர் இடம்பெயர்வு மற்றும் இனவிருத்தி பற்றிய தரவுகள் சேகரிக்கப்படும்.

புதிய சிறப்பம்சங்கள் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு

இந்த கணக்கெடுப்பில் முதன்முறையாகப் பல அதிநவீன அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன,

  • சுய கணக்கெடுப்பு (Self Enumeration) போர்டல் வசதி.
  • புவிசார் குறியீட்டுடன் (Geo-tagging) கூடிய டிஜிட்டல் வரைபடங்கள்.
  • செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் CMMS தொழில்நுட்பப் பயன்பாடு.
  • சாதிவாரி கணக்கெடுப்பு: இது கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • வீடற்றோருக்கான வசதி: வீடு அற்றவர்கள் எங்கு தங்கியுள்ளார்களோ, அங்குள்ள முகவரி மற்றும் அவர்களின் வாழ்விடம் துல்லியமாகப் பதிவு செய்யப்படும்.

நாளை முதல்… டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. சிம்பிளா உங்க போன்லயே பண்ணலாம்.. முழு கைடு இதோ!

நாளை முதல் ‘சுய கணக்கெடுப்பு’ (Self-Enumeration) வசதி
பொதுமக்கள் தங்களின் விவரங்களை இணையதளத்தில் தாங்களாகவே பதிவு செய்வதற்கான ‘சுய கணக்கெடுப்பு’ (Self-Enumeration) வசதி நாளை (ஜூலை 17) முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். காகிதப் பதிவேடுகளுக்குப் பதிலாக மொபைல் செயலிகள் பயன்படுத்தப்படவுள்ள இந்த முறையில், மக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க மொபைல் சாதனங்கள் மற்றும் சர்வர் நெட்வொர்க்குகளில் ‘மூன்றடுக்கு பாதுகாப்பு முறை’ செயல்படுத்தப்பட்டுள்ளது. சுய கணக்கெடுப்பை வெற்றிகரமாக முடித்தவுடன் ஒரு தனித்துவமான அடையாள எண் (SE ID) உருவாக்கப்படும். இந்த எண்ணை, ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை வீடு வீடாக வரவிருக்கும் கணக்கெடுப்பாளர்களிடம் காண்பித்தால் போதுமானது. இந்த வசதியைப் பயன்படுத்தாத குடும்பங்களுக்கு, ஆகஸ்ட் மாத களப்பணியின் போது அதிகாரிகள் நேரடியாக விவரங்களைச் சேகரிப்பார்கள்.

33 கேள்விகள் மற்றும் களப்பணி அதிகாரிகள் விவரம்
வீடு வீடாகச் சென்று விவரங்களைச் சேகரிக்கும் களப்பணியின் போது வீட்டின் வசதி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், இணைய வசதி, சமையல் எரிபொருள், வாகனங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் உள்ளிட்ட சுமார் 33 கேள்விகள் கேட்கப்படும். இதற்காகத் தமிழகம் முழுவதும் 1026 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் முதன்மை கணக்கெடுப்பு அதிகாரியாகச் (Principal Census Officer) செயல்படுவார்கள். சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் முதன்மை கணக்கெடுப்பு அதிகாரியாகவும், சென்னை மாவட்ட ஆட்சியர் கூடுதல் முதன்மை கணக்கெடுப்பு அதிகாரியாகவும் செயல்படுவர். களப்பணியில் 6 கணக்காளர்களுக்கு ஒரு சூப்பர்வைசர் (மேற்பார்வையாளர்) நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு முறையான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

“மாநிலத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும், வலுவான கொள்கை உருவாக்கத்திற்கும் துல்லியமான தரவுச் சேகரிப்பு மிக முக்கியமானது. இந்தியாவில் ஏற்கனவே 20 மாநிலங்களில் முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. பொதுமக்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்தி, களப்பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்று தலைமை கணக்கெடுப்பு அதிகாரி சுந்தரேஷ் பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.

சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) செய்வதற்கான பயனர் வழிகாட்டி
பொதுமக்கள் தங்களது மொபைல் அல்லது கணினியைப் பயன்படுத்தி 15 முதல் 20 நிமிடங்களில் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான எளிய வழிமுறைகள்,

  • படி 1: இணையதளத்தை அணுகுதல்: se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் திறந்து, உங்கள் மாநிலத்தைத் தேர்வு செய்து, Captcha-வை உள்ளிட்டுத் தொடரவும். (டிஜிட்டல் வரைபடத்திற்காக லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் பயன்படுத்துவது சிறந்தது).
  • படி 2: குடும்பப் பதிவு: குடும்பத் தலைவரின் பெயரை உள்ளிடவும் (இதை பின்னர் மாற்ற முடியாது). குடும்ப உறுப்பினரின் ஒரு மொபைல் எண்ணை உள்ளிடவும் (ஒரு எண்ணை ஒரு குடும்பத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்). விருப்பமிருந்தால் மின்னஞ்சல் முகவரியையும் அளிக்கலாம்.
  • படி 3: மொழி & OTP சரிபார்ப்பு: உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்து, மொபைலுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டு சரிபார்க்கவும்.
  • படி 4: வசிப்பிட விவரங்கள்: மாவட்டம், PIN குறியீடு, கிராமம்/நகரம், பகுதி மற்றும் அருகிலுள்ள அடையாள இடத்தை உள்ளிட்டு “Search” செய்யவும்.
  • படி 5: வரைபடத்தில் இருப்பிடம் குறித்தல்: திரையில் தோன்றும் வரைபடத்தில் உள்ள சிவப்பு நிறக் குறியீட்டை (Red Marker) உங்கள் வீட்டின் துல்லியமான இடத்திற்கு நகர்த்தி, “Save & Next” என்பதைக் கிளிக் செய்து பதிவை நிறைவு செய்யவும்.

“யாராக இருந்தாலும் பதவி பறிக்கப்படும்!” – லஞ்சம், ஊழலுக்கு எதிராக அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அதிரடி எச்சரிக்கை!

MUST READ