நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக டெல்லியில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தடி தாக்குதலைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும், நாளை (ஒரு நாள்) தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.
டெல்லி சம்பவத்திற்கு வன்மையான கண்டனம்
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. லத்தியில் ஆணிகளைப் அடித்துத் தாக்கும் அளவிற்குக் கொடுமையான முறையில் மாணவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு கூட்டமைப்பு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மாநில அரசுக்குக் கோரிக்கை & விமர்சனம்
தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, நீட் தேர்வை முற்றிலுமாகத் தடை செய்ய தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வை எதிர்த்துப் போராடும் மாணவர்கள் மீது மாநிலக் காவல்துறை கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் கைவிட வேண்டும். அனிதாவின் மறைவுக்குப் பிறகு நீட் எதிர்ப்பை முன்னெடுத்த அரசு, தற்போது அமைதி காப்பது சரியல்ல. மாறாக, போராடும் மாணவர்களுக்கு முழு உறுதுணையாக நிற்க வேண்டும்.
வரும் 26-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட பேரணி
இந்திய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் மிகப்பெரிய அளவிலான பேரணி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு அறிவுரை
“திரைப்படங்களை (ஜனநாயகன் போன்ற) விட நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டமே மிகவும் முக்கியமானது. வருங்கால தலைமுறையின் மருத்துவக் கனவை நனவாக்க மாணவர்கள் இதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.” இந்தச் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் அசார், பிரபாகரன் மற்றும் அபூபக்கர் சித்திக் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளைப் பதிவு செய்தனர்.
மாணவர்கள் மீது மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது!”: திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு!
