spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுராஜஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபாரம்!

ராஜஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபாரம்!

-

- Advertisement -

 

ராஜஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபாரம்!
Photo: IPL Official Twitter Page

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 52- வது லீக் போட்டி, நேற்று (மே 07) இரவு 07.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

we-r-hiring

தலைவர்கள் இறுதி கட்டப் பிரச்சாரம் – இன்று மாலையுடன் ஓய்கிறது

முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக ஜோஸ் பட்டலர் 95 ரன்களையும், சாம்சன் 66 ரன்களையும், ஜெய்ஸ்வால் 35 ரன்களையும் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்து, ராஜஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

லிஸ்ட் பெருசாயிட்டே போகுதே… ‘லியோ’ படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகை!

ஹைதராபாத் அணி தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 55 ரன்களையும், ராகுல் திரிபாதி 47 ரன்களையும் எடுத்துள்ளனர்.

ராஜஸ்தான் அணியின் சாஹல் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 1 விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.

MUST READ