பிரபல நடிகரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. இதனைத் தொடர்ந்து, அரசியல் சூழல் மற்றும் சினிமாத் துறை குறித்தும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
”சினிமா புகழைத் தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது?”
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், நடிகர் விஜய் முதல்வரானதைச் சுட்டிக்காட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ”புகழ்பெற்ற நடிகர் நசுருதீன் ஷா கூறியது போல, ‘இந்த நகரம் தீப்பற்றி எரிகிறது என்று நீங்கள் வருந்துகிறீர்கள்; ஆனால், அந்தப் பைத்தியக்காரன் கையில் தீப்பெட்டியைக் கொடுத்தது யார்?’ என்பதுதான் என் கவலை”.
மேலும் தொடர்ந்த அவர், “சினிமாவிலிருந்து நேரடியாக முதலைமைச்சர் அரியணைக்கு மிக எளிதாக மாறிவிட்டீர்கள். சினிமா புகழைத் தவிர்த்து, உங்களை மக்கள் முதல்வராகத் தேர்வு செய்ததற்கு ஒரேயொரு தகுதியை அல்லது காரணத்தைச் சொல்ல முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

”ஒரு நல்ல படம் கூடத் தரவில்லை”
திரைப்படப் பின்னணி குறித்து விமர்சித்த சீமான், “எம்.ஜி.ஆர் காலத்தில் தாயைப் போற்றுவது, பெண்களை மதிப்பது, நல்லொழுக்கம் போன்ற நற்கருத்துகளைத் தாங்கிய நூற்றுக்கணக்கான பாடல்களும் படங்களும் இருந்தன. ரஜினி, கமல் போன்றவர்களும்கூடப் பல நல்ல திரைப்படங்களைக் கொடுத்துள்ளனர். ஆனால், 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததில் ஒரு நல்ல படத்தைக் கூடத் தராத ஒருவர், நாட்டிற்கு நல்லாட்சி தருவார் என்று இந்த மக்கள் எப்படி நம்புகிறார்கள்?” என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
கரூர் சம்பவம் மற்றும் போதைப் பொருள் பயன்பாடு
கரூர் சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்துப் பேசிய சீமான், “அந்தச் சம்பவத்திற்குக் காரணமான குற்றவுணர்ச்சியோடு ‘நானும் ஒரு காரணமாக இருந்துவிட்டேன்’ என்று இதுவரை முதல்வர் ஒரு வார்த்தைகூடப் பதிவு செய்யவில்லை. மாநிலத்தில் தெருவுக்குத் தெரு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் எளிதாகக் கிடைக்கின்றன . போதைப் பொருள்களைப் பயன்படுத்துபவர்களுக்கு அது எங்குக் கிடைக்கிறது என்று தெரிகிறது, ஆனால் காவல்துறையினருக்கு மட்டும் தெரியவில்லையா?” எனக் காட்டமாகக் கேட்டார்.
அடிப்படைச் சேவைகள் மற்றும் அரசியல் சூழல்
கல்வி, மருத்துவம், குடிநீர் போன்ற அடிப்படை அத்தியாவசியத் தேவைகள் வணிகமயமாக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் பிரச்சினைகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் ஒருபுறம் தீவிரமடைந்து வரும் நிலையில், சினிமா மோகத்திலும் கொண்டாட்டங்களிலும் மூழ்கியிருப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது அல்ல என்றும் சீமான் சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
