HomeBreaking Newsசுற்றுச்சூழல் முன் அனுமதி விவகாரம்: மத்திய அரசின் 2021-ம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணையை ரத்து செய்தது...

சுற்றுச்சூழல் முன் அனுமதி விவகாரம்: மத்திய அரசின் 2021-ம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

-

- Advertisement -

தொழில் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கு முன்பாகவே சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்றும், திட்டங்கள் தொடங்கப்பட்ட பின்னர் பின்னேற்பு (Ex-post facto) அடிப்படையில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்காக மத்திய அரசு வெளியிட்ட 2021-ம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணையை ரத்து செய்தும் உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது.

உச்ச நீதிமன்றம்

we-r-hiring

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

  • முன் அனுமதி கட்டாயம்: எந்தவொரு புதிய திட்டத்தையும் தொடங்குவதற்கு முன்னதாகவே உரிய சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறப்படுவது அவசியமாகும். திட்டங்கள் தொடங்கப்பட்ட பின்னர் அதற்குப் பின்னேற்பு முறையில் சுற்றுச்சூழல் அனுமதியைக் கோர முடியாது.

  • நிரந்தர நிர்வாக முறைக்குத் தடை: சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறாமல் தொடங்கப்பட்ட திட்டங்களுக்குப் பின்னர் அனுமதி பெறுவதற்கு வழிவகுக்கும் வகையில், அரசாங்கத்தால் எந்தவொரு நிரந்தர நிர்வாக வழிமுறையையும் உருவாக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

  • விதிவிலக்கான சூழல்கள்: இருப்பினும், பொதுநலனைக் கருத்தில் கொண்டு, விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் சம்மந்தப்பட்ட திட்டத்துக்கான சுற்றுசூழல் அனுமதியைப் பெறும் வகையில் ஒரு பொதுத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • புதிய விண்ணப்பங்களுக்குத் தடை: இத்தீர்ப்பின்படி, 2021-ம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணையின் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி கோரி இனிப் புதிதாக எந்த விண்ணப்பமும் செய்ய முடியாது.

ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிகள் குறித்த விளக்கம்:

  • 2021-ம் ஆண்டு குறிப்பாணையின் விதிகளின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிகள் தொடர்ந்து செல்லும் என்றும், இந்தத் தீர்ப்பு இனிவரும் காலத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ள இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தற்போதைய சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழக அரசியல் களம்: மாநில உரிமைகள் மற்றும் கூட்டணிக் குழப்பங்கள் குறித்து வழக்கறிஞர் அலீம் அல் புகாரி பேட்டி!

MUST READ