Homeசெய்திகள்தமிழ்நாடுஎத்தனை வழக்குகளைப் போட்டாலும் சட்டப்படி எதிர்கொள்வேன்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!

எத்தனை வழக்குகளைப் போட்டாலும் சட்டப்படி எதிர்கொள்வேன்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!

-

- Advertisement -

“மக்கள் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே என் மீது வழக்குகள்” – தவெக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!எத்தனை வழக்குகளைப் போட்டாலும் சட்டப்படி எதிர்கொள்வேன்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தன் மீதான வழக்குகள் குறித்தும் தவெக அரசின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையாகப் பதிலளித்துள்ளார்.

தலைமறைவுச் செய்திக்கு மறுப்பு – நீதிமன்ற விலக்கு குறித்து விளக்கம்
ஒவ்வொரு முறை வழக்குப் பதிவு செய்யப்படும்போதும் தான் தலைமறைவாகிவிடுவதாகத் தொடரும் பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த செந்தில் பாலாஜி, தான் எங்கும் செல்லவில்லை என்றும் வழக்கறிஞர்களைச் சந்திப்பதற்காகவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்றும் தெளிவுபடுத்தினார்.

we-r-hiring

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரவிருப்பதால், மூத்த வழக்கறிஞர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டி ஜூலை 29 மற்றும் 30 உள்ளிட்ட ஐந்து நாட்களுக்குக் காவல் நிலையத்தில் ஆஜராவதிலிருந்து விலக்குக் கோரி விசாரணை அதிகாரியிடம் கடிதம் அளித்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார். நேற்றைய தினம் இரண்டு நாள்களுக்கானப் பணியை முடித்துவிட்டு, உரிய பதிலளிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“சிறைவாசத்தைப் பார்த்தவன்; அஞ்சி ஓடமாட்டேன்”
தான் எங்கேயும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும், சட்டத்துறை அமைச்சர் கூறுவதுபோல அனைத்தையும் சட்டப்படியே சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்தார். “ஏற்கனவே ஒன்னேகால் வருஷம் சிறைவாசத்தைப் பார்த்தவன்; அஞ்சி ஓடக்கூடிய ஆள் நான் இல்லை. எனது 50 ஆண்டு கால வாழ்வில் 30 ஆண்டுகள் பொதுவாழ்விலும், 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் அங்கீகாரத்துடன் பணியாற்றி வருகிறேன். எத்தனை வழக்குகளைப் போட்டாலும் அவற்றைச் சட்டப்படி எதிர்கொள்ளத் தயார்” என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளாா்.எத்தனை வழக்குகளைப் போட்டாலும் சட்டப்படி எதிர்கொள்வேன்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!

தவெக அரசு மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள்
தற்போதைய தவெக அரசு மக்கள் பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இதுபோன்ற வழக்குகளைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டிய அவர், சில முக்கியப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டினார்,

  • மின்கட்டண உயர்வு: மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு 9 முதல் 10 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அரசு ஒப்புக்கொண்டாலும், முறையான தீர்வு காணாமல் திசைதிருப்ப முயல்வதாக அவர் சாடினார்.
  • விவசாயிகள் போராட்டம்: “சொடக்கு போட்டு ஆட்சி அமைந்த அடுத்த நிமிடமே விவசாயக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்” என்று வாக்குறுதியளித்துவிட்டு, தற்போது ஒரு சாராருக்கு மட்டும் வரம்பு நிர்ணயித்து விவசாயிகளை நடுரோட்டில் போராடச் செய்யும் சூழ்நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளது என்றார்.
  • காவிரி & மேகதாது விவகாரம்: காவிரி டெல்டா பகுதி வறண்டு கிடக்கும் நிலையில், தண்ணீரை மீட்க வழியின்றித் தினம் ஒரு முரணான கருத்தைச் சட்டத்துறை அமைச்சர் தெரிவித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், எதிர்க்கட்சியினர் மீது வழக்குகளைத் தொடுப்பதிலும் கைது நடவடிக்கைகளிலும் மட்டுமே தவெக அரசு கவனம் செலுத்தி வருவதாகச் செந்தில் பாலாஜி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

காவிரி விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனக் கூறியது திமிர்த்தனமானது – த.வெ.க. அரசுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி கண்டனம்!

MUST READ