spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"உயர்கல்விக்கு தேவையான உதவி செய்வதாக முதலமைச்சர் கூறினார்"- மாணவி நந்தினி பேட்டி!

“உயர்கல்விக்கு தேவையான உதவி செய்வதாக முதலமைச்சர் கூறினார்”- மாணவி நந்தினி பேட்டி!

-

- Advertisement -

 

"உயர்கல்விக்கு தேவையான உதவி செய்வதாக முதலமைச்சர் கூறினார்"- மாணவி நந்தினி பேட்டி!
Photo: TN Govt

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 08) காலை 10.00 மணிக்கு வெளியானது. சுமார் 8.17 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதிய நிலையில், மொத்தம் 94.03% பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 91.45% பேரும், மாணவிகள் 96.38% பேரும் அடங்குவர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினி, அனைத்து பாடங்களிலும் 100- க்கு 100 என்ற அடிப்படையில் 600 மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்து, மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். அந்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும், வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

we-r-hiring

செல்வராகவன், யோகிபாபு கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (மே 09) காலை 11.00 மணியளவில் மாணவி நந்தினி நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது, அவருக்கு முதலமைச்சர் சாக்லெட்டுகள் கொண்டக் கூடையைப் பரிசளித்தார்.

இந்த நிகழ்வின் போது, பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்துறை ஆணையர் க.நந்தகுமார் இ.ஆ.ப., மாணவியின் பெற்றோர், தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆளுநரின் பொய்மூட்டை அரசியல் – முதலமைச்சருக்கு கவனம் வேண்டும்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாணவி நந்தினி, “உயர்கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதாக முதலமைச்சர் கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ