Homeசெய்திகள்தமிழ்நாடு"சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பதே ஆளுங்கட்சிக்கு நன்மதிப்பு!" — திருமாவளவன் வலியுறுத்தல்

“சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பதே ஆளுங்கட்சிக்கு நன்மதிப்பு!” — திருமாவளவன் வலியுறுத்தல்

-

- Advertisement -

நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பதே ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பதே ஆளுங்கட்சிக்கு கண்ணியத்தையும் நன்மதிப்பையும் தரும். அதேவேளையில், மேடைகளில் கருத்துக்களைப் பேசும்போது ‘எள்ளல் நடையில்’ பேசுவதையும் தவிர்த்திருக்க வேண்டும்.

காவிரி உரிமையில் பிணைப்பு
தற்போதைய இக்கட்டான சூழலில், தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரி நீர் உரிமைக்காக அனைத்துக் கட்சிகளும் பொதுமக்களும் பாகுபாடின்றி இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அதுவே ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்க சரியான வழியாக அமையும். அரசியல் மேடைகளில் பேசப்படும் பேச்சுக்கள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இரு தரப்புக்கும் அறிவுறுத்தும் வகையில் திருமாவளவன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை அரசியல் களத்தில் கவனிப்பைப் பெற்றுள்ளது.

உதயநிதி ஸ்டாலினை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்!

MUST READ