- Advertisement -
எரிந்த நிலையில் அலங்கோலமாக கிடந்த திருநங்கை சடலம்! கோவையில் பரபரப்பு
கோவை காந்திபுரம் பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் திருநங்கை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் எரிந்த நிலையில், சுமார் 39 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருப்பதாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்த நபரை உடலை மீட்டு, இறந்தவர் யார் என்பது குறித்தும் கொலையா? என்ற கோணத்தில் விசாரணை துவங்கினர்.

இந்நிலையில் மருத்துவ பரிசோதனையில் இறந்தவர் திருநங்கை என்பதும் தெரியவந்ததுள்ளது. இருப்பினும் அவர் யார்? எதற்கு வந்தார்? என்பதும்,
திருநங்கை சடலமாக மீட்கப்பட்ட இடம் இறுதியாக யார் பயன்பாட்டில் இருந்தது? என சாலை ஓர சிசிடிவி கண்காணிப்பு கேரமா காட்சிகளை வைத்து காட்டூர் போலீசார் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.