Homeசெய்திகள்ஆவடிஆவடி அருகே வட மாநிலச் சிறுமி மர்ம மரணம்: காதலனின் தொல்லையே காரணமா? - காவல்...

ஆவடி அருகே வட மாநிலச் சிறுமி மர்ம மரணம்: காதலனின் தொல்லையே காரணமா? – காவல் ஆணையரிடம் தந்தை பரபரப்பு புகார்!

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் எல்லைக்குட்பட்ட மிட்டனமல்லி பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தன் மகளின் மரணத்திற்குத் தூண்டுதலாக இருந்ததாகக் கூறும் இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவியின் தந்தை ஆவடி காவல் ஆணையரிடம் நேரில் புகார் அளித்துள்ளார்.ஆவடி அருகே வட மாநிலச் சிறுமி மர்ம மரணம்: காதலனின் தொல்லையே காரணமா? - காவல் ஆணையரிடம் தந்தை பரபரப்பு புகார்!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பி. ரமேஷ்குமார் மண்டல் என்பவர், கடந்த 10 ஆண்டுகளாக ஆவடி அடுத்த மிட்டனமல்லி, அங்கப்பன் தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு அல்கா குமாரி (16) என்ற மூத்த மகளும், மற்ற பிள்ளைகளும் உள்ளனர். கடந்த ஜூலை 30-ம் தேதி மாலை, மாணவி அல்கா குமாரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

we-r-hiring

அப்போது, ஆலத்தூரைச் சேர்ந்த ஜீவன் என்ற இளைஞர் வீட்டிற்கு வந்து, மாணவியைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தித் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், அங்கிருந்த தொலைக்காட்சியை உடைத்து, மாணவியைத் தாக்கி, அவதூறாகப் பேசி மிரட்டிவிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

நடந்தது என்ன?
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த இளைய சகோதரி மற்றும் சகோதரர், வீடு அடித்து நொறுக்கப்பட்டுப் பொருள்கள் சேதமடைந்திருப்பதைக் கண்டுள்ளனர். அதன் பிறகு வீட்டிலிருந்து சத்தம் கேட்கவே, வீட்டின் உரிமையாளர் சென்று பார்த்தபோது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்தச் சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் குடும்பத்தினர் கண்ணீர்மல்கப் புகார் தெரிவித்துள்ளனர்.ஆவடி அருகே வட மாநிலச் சிறுமி மர்ம மரணம்: காதலனின் தொல்லையே காரணமா? - காவல் ஆணையரிடம் தந்தை பரபரப்பு புகார்!

காவல்துறையின் விசாரணை மற்றும் நடவடிக்கை
இந்தச் சம்பவம் தொடர்பாக முத்தாப்புதுப்பேட்டை காவல் நிலையத்தில் பிஎன்எஸ்எஸ் (BNSS) பிரிவு 194-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், உடற்கூறு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, மாணவியின் தந்தை ரமேஷ்குமார் மண்டல், சகோதரர் ஆயிஸ் மண்டல் மற்றும் குடும்பவினர் ஆவடி காவல் ஆணையரை நேரில் சந்தித்து, ஜீவன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறி கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்துள்ளனர். மாணவியின் மரணத்திற்கு முன் நிகழ்ந்த உண்மைகள் என்ன, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் யாவை மற்றும் ஜீவன் மீது கூடுதல் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுமா என்பது குறித்து ஆவடி காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

உதயநிதி கைதுக்கு கண்டனம்: ஆவடியில் சா.மு.நாசர் தலைமையில் மாபெரும் சாலை மறியல் – 500 திமுகவினர் கைது

MUST READ