Homeசெய்திகள்தமிழ்நாடு"எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கத் தயக்கமில்லை... ஆனால், அதற்கு முன் காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்...

“எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கத் தயக்கமில்லை… ஆனால், அதற்கு முன் காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்!” – திமுக நிபந்தனை!

-

- Advertisement -

தொகுதி மறுசீரமைப்பில் ‘Fair Delimitation’ வேண்டும்! மேகதாது விவகாரத்தில் த.வெ.க. அரசு ‘டேக் டைவர்ஷன்’ செய்ய வேண்டாம் – தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி அறிக்கை!"எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கத் தயக்கமில்லை... ஆனால், அதற்கு முன் காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்!" - திமுக நிபந்தனை!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளும் பிரதிநிதித்துவமும் பாதிக்கப்படாத வகையில் நியாயமான முறையில் (Fair Delimitation) சீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருப்பதாகக் கழகப் பொதுச்செயலாளர் திரு. துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும், மேகதாது பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில், அதிலிருந்து கவனத்தை திசைதிருப்ப த.வெ.க. அரசு ‘டேக் டைவர்ஷன்’ அரசியலில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

we-r-hiring

திமுகவின் நிலைப்பாட்டில் எந்தத் தடுமாற்றமும் இல்லை
இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “தமிழ்நாட்டின் நலனையும், நம் மாநிலத்திற்குரிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் பாதிக்காத வகையில் ‘Fair Delimitation’ மேற்கொள்ள வேண்டும் என்பதே திமுகவின் அறுதியான நிலைப்பாடு. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் திமுக இப்போதும் உறுதியாக இருக்கிறது; இதில் எந்த மாற்றமோ, தடுமாற்றமோ இல்லை.

தற்போது நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் அலுவல் அட்டவணையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படாத சூழலில், இந்த விவகாரத்தில் திமுகவுக்கு அறிவுரை கூறும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை. முறையற்ற தொகுதி மறுசீரமைப்பால் நாட்டிற்கு வரவிருக்கும் ஆபத்தை முதன்முதலில் சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட மாநிலங்களை ஓரணியில் திரட்டி தேசிய அளவில் குரல் கொடுத்தவர் நமது தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவார்.”

தேர்தல் பரப்புரையை விட மாநில உரிமையே முக்கியம்
முந்தைய நிகழ்வுகளை சுட்டிக்காட்டிய அவர், சட்டமன்றத் தேர்தல் பரப்புரை உச்சக்கட்டத்தில் இருந்தபோதே, “தேர்தலை விட தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பதே முதன்மைப் பணி” எனப் பிரகடனம் செய்து, கருப்புக் கொடி ஏந்தியும், சட்ட நகலை எரித்தும் எதிர்ப்பைப் பதிவு செய்தவர் மு.க.ஸ்டாலின் என்பதை நினைவூட்டினார்.

எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க நிபந்தனை
தமிழக அரசு ஆகஸ்ட் 8 அன்று அழைப்பு விடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களைத் தெரிவிப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள துரைமுருகன், அதற்கு முன்பாக ஒரு முக்கிய நிபந்தனையை முன்வைத்துள்ளார். “கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் சூழலில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமையையும் உணர்வையும் வெளிப்படுத்த உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். புதுக் கூட்டாளியான காங்கிரஸின் மனம் புண்படும் என்பதற்காக மேகதாது விவகாரத்தில் கள்ள மௌனம் சாதித்துவிட்டு, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை மட்டும் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட்டால் அதைத் தடுக்கும் முன்னணிப் படையாக திமுக இருக்கும். அதேநேரம், காவிரி உரிமையை மீட்பதும் மேகதாது அணையைத் தடுப்பதும் தற்போதைய மிக முக்கியமான அவசியமாகும். எனவே, த.வெ.க. அரசு இந்த நேரத்தில் ‘டேக் டைவர்ஷன்’ அரசியலை மேற்கொள்ள வேண்டாம்!” என்று தனது அறிக்கையில் துரைமுருகன் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் முதல் பட்ஜெட்: “மாற்றம்” எங்கே? – சிபிஎம் கனகராஜ் காரசார விமர்சனம்!

MUST READ