spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா ட்ரீட்... இந்த வாரம் வெளியாக இருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

சினிமா ட்ரீட்… இந்த வாரம் வெளியாக இருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

-

- Advertisement -
இந்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க இருக்கும் படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்!

கஸ்டடி

வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிப்பில் ‘கஸ்டடி’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார்.  நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடித்துள்ளார்.

we-r-hiring

நடிகர் அரவிந்த் சாமி கஸ்டடி படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சரத்குமார், பிரியாமணி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ‘இசைஞானி’ இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்தப் படம் வரும் மே 12-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

ராவணக் கோட்டம்

மதனயனைக்கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரமன் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் ‘இராவணக் கோட்டம்‘ திரைப்படம் உருவாகியுள்ளது. கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சாந்தனு கிராமத்து கதை களத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலமாக அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குட் நைட்

விக்ரம் வேதா, ஜெய் பீம் போன்ற படங்களின் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் நைட்’. அறிமுக இயக்குனர் சந்திரசேகரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். முதல் நீ முடிவும் நீ பட நடிகை மீதா ரகுநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் 12-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

ஃப்ர்ஹானா

‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்களின் இயக்குனர் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் ‘ஃப்ர்ஹானா‘. ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் மே 12-ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகி  இருக்கிறது.

MUST READ