Homeசெய்திகள்இந்தியா"எங்க நிலத்துல நீ பேரு வைப்பியா?" - அருணாச்சல பிரதேசத்தில் 27 இடங்களுக்கு பெயர் மாற்றி...

“எங்க நிலத்துல நீ பேரு வைப்பியா?” – அருணாச்சல பிரதேசத்தில் 27 இடங்களுக்கு பெயர் மாற்றி இந்தியா அதிரடி!

-

- Advertisement -

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்குச் சீனா தன்னிச்சையாகச் சூட்டிவரும் பெயர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த 27 இடங்களுக்கு இந்தியா தனது அதிகாரப்பூர்வ பெயர்களை வெளியிட்டுள்ளது."எங்க நிலத்துல நீ பேரு வைப்பியா?" - அருணாச்சல பிரதேசத்தில் 27 இடங்களுக்கு பெயர் மாற்றி இந்தியா அதிரடி!

சீனாவின் தொடர் சதிக்கு முற்றுப்புள்ளி
அருணாச்சலப் பிரதேசத்தை தங்களது நாட்டின் தெற்குப் பகுதி (‘ஸங்நாத்’) என்று உரிமை கோரும் சீனா, அப்பகுதியிலுள்ள பல்வேறு இடங்களுக்குத் தொடர்ந்து தங்களது சொந்த மொழியில் பெயர்களைச் சூட்டி வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மையைச் சீர்குலைக்கும் இந்த சீண்டல்களுக்கு எவ்வித சமரசமும் இன்றி பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பாதுகாப்பு வட்டாரங்களில் வலுத்து வந்தது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி எல்லைகளில் சீனாவின் இத்தகைய தந்திரோபாய உத்திகளை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

we-r-hiring

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதன்படி, அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நிலப்பரப்புகளில் உள்ள 27 குறிப்பிட்ட இடங்களுக்குத் துல்லியமான இந்திய அதிகாரப்பூர்வ பெயர்கள் பட்டியலிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலம், இப்பகுதிகள் மீது இந்தியாவின் முழுமையான இறையாண்மை மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடு இருப்பதை உலகுக்கு இந்தியா மீண்டும் திட்டவட்டமாக உணர்த்தியுள்ளது.  சர்வதேச எல்லையில் சீனாவின் தேவையற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும், பெயர் மாற்ற உத்திகளுக்கும் இந்தியா இனி ஒருபோதும் மசியாது என்பதை இந்த அதிரடி நடவடிக்கை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

“எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள்!” – ரஷ்யா, ஈரானை ஓரங்கட்ட அமெரிக்கா போட்ட மாஸ்டர் பிளான்!

MUST READ