
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பொறுப்பேற்கவுள்ளார்.

நீதிபதி டி.எஸ்.சிவஞானம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நீதிபதி டி.எஸ்.சிவஞானம், கடந்த 1963- ஆம் ஆண்டு செப்டம்பர் 16- ஆம் தேதி பிறந்தார். சென்னை லயோலா கல்லூரியில் இளநிலை அறிவியல் பட்டமும், சென்னை சட்டக் கல்லூரியில் பட்டமும் பெற்றார். கடந்த 1986- ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். அதன்பின், பிரபல மூத்த வழக்கறிஞரான ஆர்.காந்தியிடம் ஜூனியராகச் சேர்ந்தார்.
மீண்டும் ரீரிலீஸ் ஆகும் ரஜினியின் இண்டஸ்ட்ரி ஹிட் படம்!
பல்வேறு வகையான வழக்குகளில் ஆஜரான அனுபவங்களுடன் மத்திய அரசு வழக்கறிஞராகவும், பின்னர், கடந்த 2004- ஆம் ஆண்டு மத்திய அரசின் மூத்த வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். சுங்கத்துறை, மத்திய கலால் துறை, வருவாய் துறைகளின் சிறப்பு வழக்கறிஞராகவும் பணியாற்றிய நிலையில், 2009- ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2011- ல் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். தற்போது அவரை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.