Homeசெய்திகள்தமிழ்நாடு"மாற்றத்தை தருவோம்னு சொன்ன தவெக ஆட்சியில் இதுதான் நடக்குதா?" - பள்ளிகளில் தொடரும் மது கலாச்சாரம்......

“மாற்றத்தை தருவோம்னு சொன்ன தவெக ஆட்சியில் இதுதான் நடக்குதா?” – பள்ளிகளில் தொடரும் மது கலாச்சாரம்… அன்புமணி சரமாரி கேள்வி!

-

- Advertisement -

அரசுப் பள்ளிகளில் மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்திய விவகாரத்திற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் மது எளிதாகக் கிடைப்பதை உடனடியாகத் தடை செய்வதுடன், அடுத்த மூன்று ஆண்டுகளில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்."மாற்றத்தை தருவோம்னு சொன்ன தவெக ஆட்சியில் இதுதான் நடக்குதா?" - பள்ளிகளில் தொடரும் மது கலாச்சாரம்... அன்புமணி சரமாரி கேள்வி!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

we-r-hiring

கல்விக் கூடங்கள் மதுக்கூடங்களாக மாறும் அவலம்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில், நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்பிற்குச் சென்ற மாணவிகள் சிலர் வகுப்பறையிலேயே துணை உணவுகளுடன் மது அருந்திய காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கல்வி கற்கும் கோயில்களாகத் திகழ வேண்டிய வகுப்பறைகள் இவ்வாறு மதுக்கூடங்களாக மாறி வருவது மிகுந்த கவலையளிக்கிறது. அரசுப் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் மது அருந்தும் நிகழ்வுகள் புதிதல்ல; கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய அவலங்கள் வெளிவரும்போதெல்லாம், எதிர்காலத் தூண்களாக வளர்க்கப்பட வேண்டிய குழந்தைகளை அரசும் சமூகமும் சீரழிக்கின்றனவே என்ற ஆத்திரமே மேலோங்குகிறது.

ஆட்சியாளர்களின் கடமை என்ன?
இத்தகைய நிகழ்வுகளை முற்றிலுமாகத் தடுக்க வேண்டியது ஆட்சியாளர்களின் தலையாய கடமையாகும். இளைய தலைமுறையினருக்கான மாற்றாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் தவெக ஆட்சியிலும் இத்தகையக் கொடுமைகள் தொடர்வது வேதனை அளிக்கிறது. இப்பள்ளியில் மாணவிகள் மது அருந்தியதைத் தடுக்கத் தவறியதற்காகத் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், மிக எளிதாக மது கிடைக்கும் சூழலை உருவாக்கிய ஆட்சியாளர்களுக்கும், வகுப்பறையில் மது அருந்துவதை ஒரு சாகசமாகக் கருதும் மனநிலையை மாணவர்களிடம் ஏற்படுத்தியவர்களுக்கும் என்ன தண்டனை?"மாற்றத்தை தருவோம்னு சொன்ன தவெக ஆட்சியில் இதுதான் நடக்குதா?" - பள்ளிகளில் தொடரும் மது கலாச்சாரம்... அன்புமணி சரமாரி கேள்வி!

பள்ளிகள் அருகே மதுக்கடைகள்
ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த மதுக்கடைகள், இன்று மக்கள் கூடும் இடங்களுக்கும் பள்ளிகளுக்கும் அருகிலேயே அமைக்கப்பட்டிருப்பது யாருடைய தவறு? பள்ளிகளுக்குச் செல்லும் வழியில் மாணவர்கள் குறைந்தது இரு மதுக்கடைகளையாவது கடந்து செல்ல வேண்டிய சூழல் இன்னும் நிலவுகிறது. தீமை விளைவிக்கும் விஷயங்களை ஒழிப்பதற்குப் பதிலாக, ஆன்லைனில் முன்பதிவு செய்து வரிசையில் நிற்காமல் எளிதாக மது வாங்குவதற்கான வசதிகளை உருவாக்குவதுதான் சீர்திருத்தமா? மனிதகுலத்தைச் சிதைக்கும் மதுவை ஒழிப்பதே உண்மையான அரசின் கடமையாக இருக்க வேண்டும்.

3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!
எனவே, மக்களுக்கும் மாணவர்களுக்கும் மது எளிதாகக் கிடைப்பதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். குறைந்தது ஆண்டுக்கு 1,000 மதுக்கடைகளை மூடி, அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த முதலமைச்சர் அவர்கள் துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

விவாதம் இல்லாமலே நிறைவேற்றப்படும் மசோதாக்கள்!” நாடாளுமன்றம் முதல் நீட் வரை… திருச்சி சிவா எம்.பி.யின் அனல் பறக்கும் பேட்டி!

MUST READ